தொழில்நுட்பம்

{"widgetType": "featured column", "widgetCount": 3, "widgetColor": "#3ebc18", "widgetLabel": "Technology"}

ஹெரோயினுடன் மூவர் கைது

ஹெரோயினை வைத்திருந்த குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிரிபத்கொட பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் என்டேரமுல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை சோதனையிட்ட போது 37 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஹுனுபிட்டிய பகுதியில் 15 கிராம் ஹெரோயினுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 35,200 ரூபா பணமும் கையடக்கத் தொலைபேசிகள் மூன்றும் பொலிஸாரின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment