(எம்.எஸ்.எம். ஸாகிர்)
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் சுமார் 5 இலட்சம் பெறுமதியான காலை ஆராதனை சதுக்கம் ஒன்று கிழக்கின் மாணிக்கம் ஏ.எல்.காபூல் ஆஸாத்தின் உதவியோடு கட்டப்பட்டு, சர்வதேச சிறுவர் தினத்தன்று மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக ஏ.எல்.காபூல் ஆஸாத் கலந்து கொண்டதோடு, அவருக்கு கல்லூரி அதிபர் எம்.எஸ். முஹம்மட் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இதன் போது கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் தங்களது சாதனையை வெளிக்காட்டிய கல்லூரி மாணவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் ஆசிரியர்கள் சான்றிதழ்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைத்தனர்.
நிகழ்வில், பாடசாலையின் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழையமாணவர்கள், ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




0 comments:
Post a Comment