தொழில்நுட்பம்

{"widgetType": "featured column", "widgetCount": 3, "widgetColor": "#3ebc18", "widgetLabel": "Technology"}

நோயாளர்களுக்கு உணவு வழங்குவதில்லை ; நோயாளர்கள் விசனம்

அக்கராயன் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உணவு வழங்குவதில்லை எனவும் உணவு கோரும் நோயாளர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு  மாற்றப்படுகின்றதாகவும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டு சிகிசை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என நோயாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்க்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக  அவை நிறுத்தப்பட்டுவிட்டது. எனக் கவலை தெரிவிக்கும் நோயாளர்கள் அக்கராயன் பிரதேசம் கிளிநொச்சி மாவட்டத்தில்  மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பல கிராமங்களை கொண்ட பிரதேசம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் குமாரவேலிடம் கேட்ட போது அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களில் உணவு கோரும் நோயாளர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர்.
குறித்த வைத்தியசாலையில்  இதுவரை காலமும் சிற்றூழியர்களே உணவு சமைத்துவந்தனர் கடந்த சில தினங்களாக அவர்கள்  சமைப்பதனை நிறுத்திவிட்டனர் இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment