
சூட்சுமமான முறையில் எடுத்து செல்லப்படவிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சோதனையிட்ட போதே கிளிநொச்சி பொலிஸார் குறித்த கஞ்சா பொதியை மீட்டுள்ளனர்.
இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் குறித்த சம்பவம் தொடர்பில் சோதனை மேற்கொண்ட போது மெத்தை ஏற்றிய வாகனமொன்றில் மெத்தைக்குள் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல தயாராக இருந்த போதே பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.
இதன் பின்னர் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக தரித்து நின்ற முச்சக்கர வண்டியை சோதனை செய்த பொலிஸார் அதிலிருந்தும் கஞ்சா பொதி மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
இதன்போது குறித்த இரு வாகனங்களும், சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வாகனங்களிலும் இருந்து இரண்டு கிலோ வீதம் நான்கு கிலோகிராம் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளை தொடரந்து கிளிநாச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
(கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)
0 comments:
Post a Comment