முன்னாள் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றவியல் தடுப்பு பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். 2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கி அவர் வெளிநாடு செல்ல உதவி வழங்கியமை தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் முன்னாள் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று குற்றவியல் தடுப்பு பிரிவிற்கு ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலத்தை வழங்குவதற்காக தனக்கு வேறு ஒரு தினத்தை தருமாறு அவர் குற்றவியல் தடுப்பு பிரிவிடம் வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மெக்சிகோ நோக்கி பயணித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 3.15 மணியளவில் முன்னாள் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மெக்சிகோ நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment