தொழில்நுட்பம்

{"widgetType": "featured column", "widgetCount": 3, "widgetColor": "#3ebc18", "widgetLabel": "Technology"}

பிரதி அமைச்சர் பைசல் காஸிமின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் வைத்தியசாலையில் தாதியர்

சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காஸிமின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் தாதியர் விடுதிக்கான இரண்டாம் கட்ட நிர்மாணப் பணி புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச்.எம்.நியாஸின் வேண்டுகோளிற்கிணங்க இந்த இரண்டாம் கட்டப் பணிக்காக பைசல் காசிம் 2 கோரி 50 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கி இருந்தார்.

இதேவேளை,இந்த விடுதியின் முதலாம் கட்ட நிர்மாணப் பணிக்காக பிரதி அமைச்சரால் 2 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கடந்த வருடமே முதலாம் கட்டப் பணி நிறைவுற்றது.

இந்த இரண்டாம் கட்ட நிர்மாணப் பணி புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் முஹம்மட் கௌசியின் தலைமையில் இடம்பெற்றது.வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச்.எம்.நியாஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

[பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு]
 
 
 
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment