தொழில்நுட்பம்

{"widgetType": "featured column", "widgetCount": 3, "widgetColor": "#3ebc18", "widgetLabel": "Technology"}

பாண்டிருப்பு கடற்கரை வீதி அபிவிருத்திக்கு அமைச்சர் ஹக்கீம் ஒன்பது மில்லியன் ஒதுக்கீடு..!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தமிழ் கிராமத்தின் கடற்கரை வீதி அபிவிருத்திக்காக நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர்- சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்கள் சுமார் ஒன்பது மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி விடுத்த வேண்டுகோளின் பேரில் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஆலோசனையுடன் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

மாநகர சபை உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி ஊடாக இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை பாண்டிருப்பு கிராமத்தில் 06 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் ஆறு உள் வீதிகளின் புனரமைப்பு வேலைகள் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்புனரமைப்பு பணிகளும் மாநகர சபை உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment